சேர்க்கை

நம் நிலையத்தில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவிகளின் தகுதிகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படியே சேர்க்கை நடைபெறுகின்றன. இங்கு நடத்தப்படும் NCVET கோர்ஸ்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி SSLC மற்றும SCVT கோர்ஸ்களுக்கு VIII Pass to SSLC Pass/Fail செய்தவர்கள் பயிற்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மேற்கண்ட அனைத்து கோர்ஸ்களுக்கும் 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள்; பயிற்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இத்தொழில் பயிற்சி நிலையமானது நன்கு அனுபவமும் தகுதியுமுள்ள தொழில் ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் முறையான பயிற்சி அளிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறப்பான முறையில் கண்டிப்புடன் தொழில் பயிற்சி அளித்து மிகச் சிறந்த தொழில் வல்லுநர்களை உருவாக்குவதே நிர்வாகத்தினரின் நோக்கமாகும். பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் TC மார்க் ஷீட் சாதி சான்றிதழ் வயது வரம்பு சலுகை வேண்டுபவர் உரிய சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து பயிற்சி நிலையத்தில் நேரிலோ (அ) பதிவு தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சியிலும் வரையறுக்கப்பட்ட மிகக் குறைந்த இடங்களே உள்ளதால் முதலில் விண்ணப்பிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் தேதியில் தமது அனைத்து ஒரிஜினல் சான்றிகழ்களுடன் பெற்றோருடன் வருதல் வேண்டும். நேர்முகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பட்டியலில் குறிப்பிட்டபடி பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்திடும் தகுதியுடைய மாணவ/மாணவிகளுக்கு மட்டுமே பயிற்சியில் இடமளிக்கப்படும். விண்ணப்பதாரர் பயிற்சியில் சேரும் போதும் தமது சான்றிதழ்களை பயிற்சி நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

© Sri Adhisankarar ITI | Powered by : AGASOFT